UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாய் வாகனச் சந்தையில் பயங்கர தீ விபத்து..!

fire accident

துபாயின் அல் அவிர் பகுதியில் செயல்பட்டுவரும் வாகன சந்தையில் (automobile market) இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

fire accident
2 Shares
Share via
Copy link