UAE Tamil Web

துபாய் : அடுக்குமாடிக் குடியிருப்பில் மளமளவென்று பரவிய தீ – குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்..!

fire

துபாயின் தேரா பகுதியில் உள்ள அடிக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.

இந்தத் தீ விபத்துக் குறித்து துபாய் சிவில் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9.01 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேராவின் ரிக்கா பகுதியில் அமைந்துள்ள ஃபால்கான் டவரின் 14 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்புப்படை அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றியது.

9.40 மணிக்கு தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இவ்விபத்தினால் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும் துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

fire
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap