UAE Tamil Web

தீப்பிடித்த வீட்டில் சிக்கிக்கொண்ட குடும்பம் – எரிந்து சாம்பலான வீடு – துபாயில் நேர்ந்த கோர விபத்து..!

fire

துபாயில் வீடு ஒன்றில் தீப்பிடித்ததால் அதனுள் சிக்கிக்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை துபாய் சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

துபாயின் அல் லிசைலி பகுதியில் அமைந்திருந்த வீட்டில் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டதன் விளைவாக தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும் வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த டெண்ட் மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகள் முழுமையாக எரிந்து நாசமாயின எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 7:21 மணிக்கு வீட்டில் தீப்பிடித்த தகவல் சிவில் பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. 7 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

திறம்பட செயல்பட்ட வீரர்கள் 8 மணிக்கு தீயினை முழுமையாக அணைத்தனர்.

fire
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap