UAE Tamil Web

விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி: துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் துவங்கும் தேதி அறிவிப்பு..!

sheik hamdan

துபாய் வாழ் மக்களிடையே ஆரோக்கியமான உடலமைப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச். இதனடிப்படையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் துபாயில் நடைபெறுவது வழக்கம்.

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வை துவங்கிவைத்தார். அதுமுதல் வருடந்தோறும் இந்த போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

5 வது ஆண்டில் நடைபெற இருக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கி, நவம்பர் 27 ஆம் தேதி வரையில் நடைபெறும் என துபாய் ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

sheik hamdan
1 Share
Share via
Copy link
Powered by Social Snap