துபாய் – மணிலா விமான சேவை துவங்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு பசிபிக் விமான நிறுவனம் எட்டாவது ஆண்டில் காலடி வைக்கிறது. இதனை முன்னிட்டு துபாய் மணிலா இடையிலான ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட்டை 1 திர்ஹம்ஸ்க்கு விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ஜூன் 1, 2022 முதல் ஆகஸ்டு 31, 2022 வரையில் பயணிக்க அக்டோபர் 10 – 15 தேதிக்குள் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல, மணிலா – துபாய் இடையே ஒரு பெசோ-வில் பயணிக்கவும் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஆக, ஒரு திர்ஹம்சில் துபாயிலிருந்து மணிலாவிற்கும் ஒரு பெசொவில் மணிலாவிலிருந்து துபாய்க்கும் பயணிக்கும் வாய்ப்பை செபு பசிபிக் உங்களுக்கு வழங்குகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்வோர் நேரடியாக விமான நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவே செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
