UAE Tamil Web

மீண்டும் மிரட்டும் கொரோனா : இந்த 7 நாடுகளில் இருந்து மக்கள் துபாய் வரத் தடை..!

DXB

ஆப்பிரிக்காவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவிவருவதால் குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகளில் இருந்து நேரடியாக துபாய்க்கு வரவோ அல்லது அந்நாடுகள் வழியாக துபாயை அடையவோ இடைக்காலத் தடை விதிப்பதாக துபாய் கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 29 ஆம் தேதிமுதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் எனவும் மறுஅறிவிப்பு வரும் வரையில் இந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட நாடுகள்

  1. போட்ஸ்வானா
  2. ஈஸ்வாதினி
  3. லெசோதோ
  4. மொசாம்பிக்
  5. நமீபியா
  6. தென்னாப்பிரிக்கா
  7. ஜிம்பாப்வே

அதே நேரத்தில் அமீரகத்திலிருந்து மேற்கண்ட நாடுகளுக்குச் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் கட்டுப்பாட்டு மையம் விளக்கியுள்ளது.

எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் இது காரணமாக டிக்கெட்டை உடனடியாக ரீ-ஷெடியூல் செய்ய வேண்டி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கால் செய்ய வேண்டாம் எனவும் தடை விலக்கப்பட்ட பிறகு அந்த விமான டிக்கெட்டை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பஹ்ரைன் மற்றும் சவூதி ஆகிய நாடுகளும் குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் அந்த நாடுகளுக்குப் பயணிக்க தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

DXB
15 Shares
Share via
Copy link