UAE Tamil Web

கோலாகலமாக துவங்கிய துபாய் ஃபுட் பெஸ்டிவல்-2020.!

துபாயின் வருடாந்திர சமையல் கொண்டாட்டமான துபாய் ஃபுட் பெஸ்டிவல் (DFF), நேற்று (பிப்ரவரி 26 2020) தொடங்கி மார்ச் 14 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில், துபாய் முழுவதும் உள்ள உணவு தொடர்பான நிகழ்வுகள் மற்றும் விளம்பரங்களின் தொகுப்பை காண முடியும்.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்பாடு செய்துள்ள இந்த 18 நாள் வருடாந்திர திருவிழா, மனதை மயக்கும் உணவு நிகழ்வுகளை பொதுமக்களுக்கு வழங்கும். இதில் துபாயின் இந்த ஆண்டிற்கான பிடித்தமான நிகழ்வுகளான Dubai Restaurant Week, Etisalat Beach Canteen, Hidden Gems மற்றும் Foodie Experiences ஆகியவைகள் அடங்கும்.

இந்த நிகழ்ச்சி, நகரெங்கும் உள்ள சமையல் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும். மேலும் இங்கே ஒவ்வொரு சுவை மொட்டுக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு ஒரு சுவையான உணவு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டரை வாரங்களுக்கு, உணவு ஆர்வலர்கள், அந்த பகுதியின் சுவையான வீதி உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம், துபாய் நகரத்தின் அழகை அதன் உணவின் மூலமும் கண்டறிய முடியும்.

இந்த DFF-ல் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:

எடிசலாட் பீச் கேன்டீன் (Etisalat Beach Canteen):

beach-canteen-1200x400-738x355

இந்த உணவு திருவிழாவின் முதன்மையான நிகழ்வு, எடிசலாட் பீச் கேன்டீன் ஆகும். இது சன்செட் மாலுக்குப் பின்னால் உள்ள ஜுமேரா கடற்கரையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில்

 • துபாயின் சில சிறந்த உணவு வகைகள் மக்களை கவர தயாராக உள்ளன.
 • உணவு திருவிழாவுடன் பொழுதுபோக்கு மற்றும் ஒரு பிரத்யேக குடும்ப பகுதி ஆகியவையும் இடம்பெறும்.
 • குழந்தைகளுக்கென பிரத்யேக விளையாட்டு மையம் (Kids’ Zone) உள்ளன.
 • பொதுமக்களுக்கு வேடிக்கையை அளிக்கும் வண்ணம் கேமிங் சதுக்கம் (Gaming Square) மற்றும் விளையாட்டு மையமும் (Sports court) உள்ளது.
 • உணவுப்பிரியர்கள் அங்கே நடைபெறும் சமையல் ஒர்க்க்ஷாப்-ல் பங்கேற்கலாம்.
 • மேலும் கடற்கரை அரங்கில் நடக்கும் நேரடி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளலாம்.

நடைபெறும் இடம்: சன்செட் பீச்

நடைபெறும் தேதி: February 26 2020 முதல் March 14 2020 வரை

கட்டணம்: இலவசம்

துபாய் உணவக வாரம் (Dubai Restaurant Week):

Dubai Restaurant week

துபாய் உணவக வாரம் என்னும் இந்த உணவு நிகழ்வின் வாரத்தில், துபாயின் மிகவும் கிராக்கியான 35 உணவகங்கள், 10 நாட்களுக்கு கலந்துகொள்ள உள்ளன. இந்த உணவகங்களின் பட்டியலில், இரண்டு பெரும் வகை மதிய உணவு மெனுக்கள் (two-course lunch menus) மற்றும் மூன்று பெரும் வகை இரவு மெனுக்களை (three-course dinner menus) பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளன.

இத்தகைய சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட மெனுக்களில் உணவகங்களின் மிகவும் தவிர்க்கமுடியாத உணவுகள் இடம்பெறும். மேலும் இது நகரம் முழுவதும் 18 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை வழங்கவுள்ளது.

இந்த ஆண்டு, மிச்செலின்-நட்சத்திர சமையல்காரர் அகிரா பேக், கோயா, ஹெல்’ஸ் கிச்சன், ஸ்காலினி மற்றும் பலவற்றால் விருது பெற்ற சமையல்காரர்களின் மெனு உள்பட மேலும் பிரபலமான பல உணவகங்களில் இருந்து உணவகங்களைத் தேர்வு செய்ய முடியும்.

நடைபெறும் இடம்: துபாய் முழுவதும்

நடைபெறும் நாள்: மார்ச் 5 முதல் மார்ச் 14 வரை

கட்டணம்: மதிய உணவுக்கு Dh75 முதல் & இரவு உணவிற்கு Dh150 ஆகும்.

Foodie Experience:

foodie experience

DFF-ல் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட Foodie Experience-ன் வெற்றிக்கு பிறகு, இந்த ஆண்டு மீண்டும் தயார் நிலையில் மக்களின் உணவு ஆசையை தீர்க்க வந்துள்ளது.

இந்த நிகழ்வு மாஸ்டர் கிளாஸ்கள், செஃப் அட்டவணைகள் மற்றும் தனித்துவமான இடங்களில் அனுபவமிக்க உணவு உள்ளிட்ட தனிப்பட்ட உணவு சாகசங்களை பொதுமக்களுக்கு வழங்கும்.

மேலும் DFF ஒரு புதிய வரையறுக்கப்பட்ட, வீட்டில் வளர்க்கப்படும் காபி மற்றும் சர்வதேச பிராண்டுகளிலிருந்து தனித்துவமான சிறப்பு சுவைகளுடன் கூடிய கஃபேக்களை இந்த திருவிழா காலத்தில் பிரத்தியேகமாக வழங்கவுள்ளது.

நடைபெறும் இடம்: துபாய் முழுவதும்

நடைபெறும் தேதி: பிப்ரவரி 26 முதல் மார்ச் 14 வரை

கட்டணம்: பல்வேறு பிரிவுகளில், மக்களின் தேர்வுப்படி.

HIDDEN GEMS:

hidden gems

DFF-ன் இந்த Hidden Gems ஆர்வமுள்ள சமையல் ரசிகர்களுக்கு நகரத்தில் மறைக்கப்பட்ட உணவு ஹாட் ஸ்பாட்களில் ஈடுபட்டு அனுபவிக்க வாய்ப்பளிக்கின்றன.

பொதுமக்களினால் அதிகம் கண்டுபிடிக்கப்படாத இந்த உணவகங்கள் பல்வேறு வகை உணவுகளை உங்களது பட்ஜெட்டில் அடங்குமாறு தருவதில் உறுதியுடன் உள்ளது.

இதில் பங்குபெறும் துபாயின் மறைந்த ரத்தினங்களை போன்ற உணவங்களிலில், ஏதேனும் 10-ஐ மக்கள் தேர்ந்தெடுத்து, அதற்கான வெற்றியாளர்கள் மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

நடைபெறும் இடம்: துபாய் முழுவதும்

நடைபெறும் தேதி: பிப்ரவரி 26 முதல் மார்ச் 14 வரை

கட்டணம்: நிர்ணயிக்கப்படவில்லை

Taste of Dubai:

taste of Dubai

டேஸ்ட் ஆப் துபாய் என்பது இந்நகரின் மிகவும் பிடித்தமான உணவு, பானம் அருந்துதல் மற்றும் இசை நிகழ்ச்சியாகும். இந்த விழாவிற்கு கூடுதல் உற்சாகம் சேர்க்கும் வண்ணம், முதல் முறையாக டேஸ்ட் ஆஃப் துபாய், மார்ச் 12 வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில், பெண்களுக்கான மிகப்பெரிய வெளிப்புற இரவு விருந்தளிக்கவுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வருடம், உலகளாவிய பிரபலங்களான

 • சர்வதேச அளவில் புகழ்பெற்ற மிச்செலின் நட்சத்திர சமையல்காரர், வினீத் பாட்டியா
 • துபாயின் மிகவும் விரும்பப்படும் சமையல் இரட்டையர்கள் நிக் ஆல்விஸ் மற்றும் ஸ்காட் பிரைஸ்
 • இறைச்சி & கிரில்லிங் நிபுணர் தாரெக் இப்ராஹிம்
 • அரபு & அலெப்பியன் உணவு நிபுணர் முகமது ஓர்பாலி
 • துபாயின் விருப்பமான கிக்லிங் கௌர்மெட் செஃப் ஜென்னி மோரிஸ்
 • ஸ்பைஸ் பிரின்ஸ் என வழங்கப்படும் சுறுசுறுப்பான தொலைக்காட்சி சமையல்காரர் ரெசா முஹம்மது
 • இளைய எமிராட்டி செஃப் ஆயிஷா அல் ஒபீட்லி

உட்பட இவ்விழாவில் கலந்துகொண்டு மக்களை மகிழ்விக்க களமிறங்குகிறார்கள்.

நடைபெறும் இடம்: துபாய் மீடியா சிட்டி ஆம்பிதியேட்டர்.

நடைபெறும் தேதி: மார்ச் 12 முதல் 14 வரை.

கட்டணம்: சாதாரணம் Dh55, VIP க்கு Dh120.

0 Shares
Share via
Copy link