UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி மையங்களுக்குச் செல்பவர்களுக்கு இலவச பார்க்கிங் இடங்கள் – துபாய் அரசின் புதிய அறிவிப்பு..!

PARKING

துபாயில் உள்ள தடுப்பூசி மையங்களின் அருகில் இலவச பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி மையத்தின் அருகிலும் 50 பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும் என RTA தெரிவித்துள்ளது.

ஹோர் அல் அன்ஸ், அல் பார்ஷா, அல் குசைஸ் சுகாதார மையங்கள் மற்றும் கிராண்ட் ஹையாத் ஹோட்டல் டெண்ட் பகுதிகளில் வேலை நேரங்களில் இந்த பார்க்கிங் இடங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

துபாயில் உள்ள தகுதியுள்ள நபர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்வரையில் இந்த இலவச பார்க்கிங் திட்டம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை வாகனவோட்டிகள் எளிதில் கண்டுகொள்ளும் வகையில் தகவல் பலகைகள் வைக்கப்படும் என RTA தெரிவித்துள்ளது.

இயல்பு  நிலைக்கு திரும்பிடவும், மக்கள் அனைவரையும் தடுப்பூசி பெற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.