UAE Tamil Web

சொகுசுக் காரைத் திருடி வாடகைக்கு விட்ட பலே கும்பல் – காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் கருவி..!

court

துபாயில் 5 பேர்கொண்ட கும்பல் ஒன்று ரேஞ்ச் ரோவர் காரினைத் திருடியது மட்டுமல்லாமல் அதனை வாடகைக்கும் விட்டிருக்கிறது. பின்னர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டிற்கு காரைக் கடத்தும் அவர்களது திட்டத்திற்கு வெடி வைத்திருக்கிறது துபாய் காவல்துறை.

துபாயில் செயல்பட்டுவரும் சொகுசுக் கார் வாடகை மையத்தில் இருந்து அங்கு பணிபுரிந்த டிரைவரால் கடத்தப்பட்ட காரின் இருப்பிடத்தை GPS கருவி மூலமாக காவல்துறை கண்டறிந்திருக்கிறது. வாடகைக்கு சென்ற கார் இரண்டு நாட்களாக திரும்பி வராததால் காவல்துறையை நாடியிருக்கிறது வாடகை நிறுவனம்.

காரில் இருந்த முதல் GPS கருவியை திருட்டுக் கும்பல் அகற்றினாலும் காரில் இருந்த இன்னொரு GPS கருவியை இக்கும்பல் அகற்ற மறந்திருக்கிறது. அதன்மூலமாக வேறு எமிரேட்டில் இருந்த காரை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது.

விசாரணையில் இரண்டு நாட்கள் காரை வாடகைக்கு விட்டதாக குற்றவாளிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்து வேறு நாட்டிற்கு காரை விற்க அவர்கள் முயன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

உரிய நேரத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கையால் 685,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள கார் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் கும்பலில் 4 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் அரபு நாட்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தக் கும்பலுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தண்டனை முடிவடைந்தவுடன் இவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap