UAE Tamil Web

ரொம்ப வலிக்குது சார்.. கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 16 வயது அனாதைச் சிறுமி – 6 பேர்கொண்ட காட்டுமிராண்டிக் கும்பலை வெளுத்த காவல்துறை..!

sexual harassment

வீட்டு வேலை எனக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவரை துபாய்க்கு அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 6 பேர்கொண்ட கும்பலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது துபாய் கிழமை நீதிமன்றம். மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் துபாய் மேலவை நீதிமன்றம் இன்று இவ்வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. ஆட்கடத்தல், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக மூவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் மற்றொரு ஆண் மற்றும் பெண் குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகளும் வழக்கில் 6 வது குற்றவாளிக்கு ஆறுமாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பசியும் கவலையும்…

தனது சொந்த நாட்டில் யாராவது வேலை தரமாட்டார்களா? என பசியுடனும் ஏக்கத்துடனும் சுற்றி அலைந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இளம்பெண். துக்கத்தை பகிர்ந்துகொள்ள உறவினர் என யாருமில்லாத ஆதரவற்ற அந்தப் பெண்ணை சந்தித்திருக்கிறார் இந்தக் கும்பலைச் சேர்ந்த பெண். துபாயில் வேலை, நல்ல சம்பளம் என ஆசை வார்த்தை கூறி அமீரகத்திற்கு வரும்படி அழைக்கவே, பசியின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என இளம்பெண்ணும் சரி என்றிருக்கிறார்.

போலி ஆவணங்களை தயாரித்து அமீரகத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண் அல் காராமா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சேர்த்து விடப்பட்டிருக்கிறார். சம்பளம் முழுவதையும் இந்தக் கும்பல் அப்பெண்ணிற்குத் தெரியாமல் வாங்கியிருக்கிறது. இதனையறிந்து தனது சம்பளத்தைத் தரும்படி கேட்டதற்கு, விபச்சாரத்தில் ஈடுபட்டால் மட்டுமே பணத்தைத் தருவோம் என கும்பல் தெரிவித்திருக்கிறது.

“நான் இதனை முதலில்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். என்னால் முடியாது என கோபமாகக் கத்தினேன். ஆனால் அவர்களுள் ஒருவன் என்னை ..” என வீறிட்டு அழத் துவங்கிய பெண்ணை காவல்துறையினர் ஆறுதல்கூறி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இடைப்பட்ட காலத்தில் வேறு கட்டிடத்தில் இரண்டுவாரம் அந்தப் பெண் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அப்போது இரண்டு குற்றவாளிகள் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு அப்பெண்ணை அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்திருக்கின்றனர். உடல் மற்றும் மனம் முழுவதும் காயத்துடன் சிதைக்கப்பட்டிருந்த போதுதான் காவல்துறை இக்கூடத்தினைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது.

அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தி, தரதரவென்று ஜீப்பில் ஏற்றியது.

வலி தாங்க முடியாமல் கதறிய இளம்பெண்ணிற்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க துபாய் காவல்துறை முழு முயற்சிகளையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்கடத்தல், பாலியல் வன்புணர்வு, விபச்சாரம் நடத்தியது ஆகிய குற்றங்களுக்காக இவர்களின்மீது வழக்கு பதியப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

sexual harassment
1 Share
Share via
Copy link