படித்து கொண்டே சாலையை மறந்து காரை கட்டிடத்தில் மோதிய மாணவி…

துபாயில் படித்துக் கொண்டே காரை இயற்றிய மாணவி, சாலையை கவனிக்க தவறியதால் கட்டிடத்தில் மோதி விபத்து.

இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஆம்புலன்ஸ் தினத்தன்று வெளியானது. அந்த மாணவி படிப்பில் மூழ்கி கவனத்தை சாலையின் மீது வைக்க தவறியதே, இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், கார் மோதிய அந்த பில்டிங் பொது நிறுவனம் என்றும். மேலும், அங்கே தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பணி புரிவதாகவும் எமரட் அல் யூம் – இல் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர், ‘வார கடைசி என்பதால் அந்த பில்டிங்கில் யாரும் இல்லை. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது’ என்று கூறினார்.

இந்த சம்பவம் UAE ஓட்டுநர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Khaleej Times