39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் : தங்க நகைகளுக்கு செய்கூலி இலவசம் உட்பட 6 மகத்தான தள்ளுபடி திட்டங்கள் அறிவிப்பு..!

gold

கடந்த ஜூலை 15 ஆம் தேதி துவங்கிய துபாயின் மிகப்பெரிய தள்ளுபடித் திருவிழாவான துபாய் சம்மர் சர்ப்ரைஸ் ஆகஸ்டு 8 ஆம் தேதிவரையில் நடைபெறுகிறது. இந்த விற்பனைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் துபாயின் தங்க மற்றும் ஜுவல்லரி குழுமம் (DGJG) இந்த விற்பனைத் திருவிழாவில் 100 ஜுவல்லரி கடைகள் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய DGJG வின் தலைவர் தவ்ஹித் அப்துல்லா (Tawhid Abdullah),” “வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உகந்த விலையில் தங்க நகைகளை பெற ஏற்பாடு செய்வது எப்போதும் மகிழ்ச்சிக்கான ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக பொருட்களை வாங்க முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள், சூழ்நிலை பாதுகாப்பாக மாறியுள்ளதை அடுத்து தற்போது வெளியே வரத்துவங்கியுள்ளனர். நகைகளை விடவும் அதிகமானதையே நாங்கள் வழங்குகிறோம். விலையுர்ந்த நகைகளை வாங்குவதும் சேமிப்பிற்கான முதலீடு தான். நகைகளை வாங்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு மிகப்பெரிய சலுகைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவில் DGJG குழுமம் அறிவித்திருக்கும் 6 திட்டங்கள்

ட்வின் டீல் (Twin deal) : குறிப்பிட்ட வைரம் மற்றும் முத்து நகைகளை வாங்குவோருக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அதிரடி சலுகை வழங்கப்படும்.

கோல்டு ஃபார் கோல்டு (Gold for gold) : குறிப்பிட்ட சில ஜுவல்லரிகளில் 18, 21 & 22 காரட் நகை வாங்குவோருக்கு செய்கூலி முற்றிலும் இலவசம்.

மோர் ஃபார் லெஸ் (More for less) : குறிப்பிட்ட தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகள் வாங்குவோர் நகைகளுக்கான செய்கூலியில் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி பெறலாம்.

கோல்டன் கூடீஸ் (Golden goodies) : குறிப்பிட்ட வைரம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை வாங்குவோருக்கு விலையுயர்ந்த நகைகள் இலவசமாக கிடைக்கும். 1000 திர்ஹம்ஸ் செலவழிக்கும் நபர்களுக்கு இந்த இலவசத்தை வழங்குகின்றன சில கடைகள்.

கோல்டன் டிஸ்கவுன்ட் (Golden discount) : குறிப்பிட்ட வைர மற்றும் முத்து நகைகள் வாங்குவோருக்கு நகையின் விலையில் 75 சதவிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படும்.

பிக் ஈத் ஹாம்பர் (Big Eid hamper) : ஒரு அதிர்ஷடசாலி நபருக்கு மிகப்பெரிய ஈத் பரிசுப் பொருட்களை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த விற்பனை திருவிழாவில் பங்கேற்கும் ஜுவல்லரி நிறுவனங்கள்
  • மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் (Malabar Gold & Diamonds)
  • பீமா ஜுவல்லர்ஸ் (Bhima Jewellers)
  • ஜவ்ஹாரா ஜுவல்லரி (Jawhara Jewellery)
  • அல் ரோமைசன் ஜுவல்லரி (Al Romaizan Jewellery)
  • சாம்ரா லைஃப் ஸ்டைல் ஃபைன் ஜுவல்லரி (Samra, Lifestyle Fine Jewelry)
  • ஸ்கை ஜுவல்லரி (Sky Jewellery)
  • லியாலி ஜுவல்லரி (Liali Jewellery)
  • மீனா ஜுவல்லர்ஸ் (Meena Jewellers)
  • பாஃப்லா ஜுவல்லரி (Bafleh Jewellery)
  • அல் ஹிந்த் & டைமண்ட்ஸ் (Al Hind Gold & Diamonds)
  • யாசின் ஜுவல்லரி (Yasin Jewellery)
  • குரு ஜுவல்லர்ஸ் (Guru Jewellers)
  • மெமரீஸ் கோல்டன் ஜுவல்லரி (Memories Golden Jewellery)
  • ஜேஜே & சன்ஸ் ஜுவல்லர் (JJ & Sons Jeweller)
  • காஷ்யப் ஜுவல்லர்ஸ் (Kashyap Jewellers)
  • அன்னகா, குஷி ஜுவல்லரி (Annaka, Khushi Jewellery)
  • ஹானஸ்ட் ஜுவல்லர்ஸ் (Honest Jewellers)
  • சிட்டிலப்பில்லி ஜுவல்லர்ஸ் (Chittilappilly Jewellers)
  • போப்லி கேவல்ராம் ஜுவல்லர்ஸ் (Popley Kewalram Jewelleries)
  • அல் அன்சாரி கோல்ட் & டைமண்ட்ஸ் (Al Ansari Gold & Diamonds)
  • ரோசெல்லா ஜுவல்லரி (Rossella Jewellery)
  • ரூபி ஜுவல்லர்ஸ் (Ruby Jewellers)
  • ஜ்வேல் கிளவுட் (Jewel Cloud)
  • சிரோயா ஜுவல்லர்ஸ் (Siroya jewellers)
  • ஒமேரா கோல்ட் & டைமண்ட்ஸ் (Omera Gold & Diamonds)
  • ஸாய்பா ம்ஃபார் ஜுவல்லர்ஸ் (Zaiba Mfar Jewellers).

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!