UAE Tamil Web

முதல்வர் ஸ்டாலினுக்கு BMW கார் வழங்கிய துபாய் அரசு.. வைரலாகும் வீடியோ..!

துபாய் EXPO கண்காட்சியில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை, துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் அமன் பூரி வரவேற்றார்.

192 நாடுகள் பங்கேற்றுள்ள துபாய் EXPO 2020 கண்காட்சியில் பங்கேற்பதற்காக நேற்று 4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் வந்தடைந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க அமீரக தமிழர்கள் சார்பில் பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவருடன் உயர் அதிகாரிகள் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அங்கு சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை முடித்துக் கொண்டு வரும் 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் வந்த ஸ்டாலினை துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் அமன் பூரி வரவேற்றார். மேலும் புலம்பெயர்ந்த தொழில்துறை சார்ந்த தமிழர்களும் வரவேற்றனர்.

அமீரகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கவும் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற அதிகாரிகள், அமீரக அரசிற்கு சொந்தமான BMW காரையும் பயணத்திற்காக  துபாய் அரசு வழங்கியுள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap