UAE Tamil Web

திருமணமான அடுத்த நாளே துபாய் மாப்பிள்ளை தற்கொலை.. நடந்தது என்ன..?

துபாயில் பணிபுரிந்து வரும் இளைஞர் திருமணம் நடந்த அடுத்த நாளே தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மகனான தீரஜ், துபாயில் பணியாற்றி வருகிறார். மரோட்டிசல் பகுதியைச் சேர்ந்த நீது என்ற பெண்ணுக்கும்,  கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடந்தது.

திருமணத்துக்காக துபாயில் இருந்து 10 நாட்கள் விடுமுறையில் வந்த தீரஜ், திருமணமான அடுத்த நாளே வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு பைக்கில் புறப்பட்டுள்ளார்.

நெடு நேரமாகியும் தீரஜ் வீடு திரும்பாதால் உறவினர்கள் பீதி அடைந்தனர், பின்னர் ஒல்லூரி காவல்துறையிடம் தீரஜ்ஜை காணவில்லை என புகார் கொடுத்தனர். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு தீரஜ் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்தது. அடுத்த நாள் காலை செதுவா ஏரியில் மீன் பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வீசிய வலையில் தீரஜ்ஜின் உடல் சிக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து ஏரிக்கரையில் சடலமாக கிடந்த தீரஜ்ஜின் உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap