ஜனவரி முதல் மார்ச் 2022 மாதம் வரை 4 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர்கள் துபாய்க்கு வந்துள்ளாதாகவும், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 1.27 மில்லியன் பார்வையாளர்கள் வந்திருந்ததாகவும் துபாய் இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே, பயணிகள் முதலில் தேர்வு செய்யும் இடமாக துபாய் மாறியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகையால் துபாய் ஹோட்டல் குடியிருப்பு 82 சதிவிதத்துடன் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசரும், துபாயின் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கூறியதாவது: “துபாய் மற்ற முக்கிய நகரங்களை மிஞ்சும் திறன், ஷேக்கின் தொலைநோக்கு பார்வையின் வெற்றியை நிரூத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம், உலகின் சிறந்த நகரங்களுக்கு போட்டியாக வணிகம், முதலீடு, தொழில்முனைவு மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் மையத்தை உருவாக்கி உள்ளார்.
“அவர்களது கனவுகளை நிஜமாக்குவதற்கான அவரது உறுதியான உறுதிப்பாடும், உலகளாவிய சுகாதார நெருக்கடியின் விளைவுகளும், உலகளாவிய சவால்களை சமாளிக்கும் திறன், பார்வையாளர்களுக்கான சிறப்புமிக்க வசிதி போன்றவற்றால் துபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது” இவ்வாறு ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.