துபாயில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்றை துபாய் சுகாதார ஆணையம் முன்னெடுத்துள்ளது.
துபாய் சுகாதார ஆணையம், துபாய் ஆம்புலன்ஸ் மற்றும் முகமது பின் ரஷீத் மருத்துவப் பல்கலைகழககம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை நடத்திவருகின்றன.
துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை மட்டும் நீங்கள் வைத்திருந்தால் போதும். துபாய் சுகாதார ஆணையத்தின் இலவச அழைப்பு எண்ணான 800 342 க்கு நீங்கள் கால் செய்து உங்களுடைய தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் கால் செய்த 48 மணிநேரத்திற்குள் உங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும்.
துபாயில் 2021 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவை அறிவித்துள்ளது துபாய் சுகாதார ஆணையம்.
