துபாயில் WETEX – 2019 கண்காட்சி!

Image - WETEX

துபாய் மின்சார மற்றும் குடிநீர் ஆணையம் (DEWA) நடத்தும் 21 வது நீர், ஆற்றல், தொழிற்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி (WETEX) வரும் அக்டோபர் மாதம் 21 முதல் 23 வரை சர்வதேச துபாய் Convention & Exhibition சென்ட்டரில் நடைபெற உள்ளது.

துபாய் துணை அதிபர், நிதி அமைச்சர் மற்றும் DEWA தலைவரும் ஆன, H.H ஷேக் ஹாம்தான் பின் ரஷீத் அல் மக்தும் அவர்களது தலைமையில் இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து 6 வது வருடமாக இந்த கண்காட்சியை DEWA ஆணையம் Umrella Of Green Week – இன் கீழ் நடத்தி வருகிறது. இது பல்வேறு சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியது. மேலும், ஆற்றல் வளம், நீர் மற்றும் நிலையான பசுமை பொருளாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த 21 வது கண்காட்சியில் புதிய தொழிற்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக ஆற்றல் புதுப்பித்தல், நீர், நிலையான சுற்றுச்சூழல் பராமரிப்பு திறன் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என DEWA கூறியுள்ளது.

Loading...