வேலைக்காக துபாய் சென்ற என் மனைவி தற்போது போலீஸ் கஸ்டடியில் இருப்பதாகவும், அவரை மீட்டு தரும்படி கணவர் தமிழக அமைச்சரிடம் மனு கொடுத்து இருக்கிறார்.
பொருளாதார கஷ்டத்தினை போக்க தமிழ்நாட்டில் இருந்து ஏகப்பட்ட ஆண்களும், பெண்களும் தினமும் துபாயிற்கு விமான ஏறுவது தொடர்கதையாகி இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு துபாய் நல்ல வாழ்க்கையை தான் இதுவரை கொடுத்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஒரு சிலருக்கு இந்த வாழ்க்கை பெரிய சூன்யமாகி விடுகிறது.
தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த கார்த்தியாயினி 32 வயதை சேர்ந்தவர் கடந்த அக்டோபர் மாதம் வீட்டு வேலைக்காக துபாய் வந்திருக்கிறார். சென்னையில் இருந்து விமான நிலையம் ஏறியவர் துபாயிலும் இறங்கிவிட்டார். ஆனால் அங்கு தான் அவருக்கு பெரிய பிரச்னையே உருவாகி இருக்கிறது.
வேலைக்காக சென்ற வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்து இருக்கின்றனர். ஆனால் கார்த்தியாயினி காப்பாற்றப்பட்டு போலீஸ் அவரை அழைத்து சென்று விட்டனர். தற்போது அவர்களின் பாதுகாப்பில் இருக்கும் கார்த்தியாயினி நாடு திரும்ப முடியாமல் இருக்கிறார்.
இந்நிலையில், அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை வைக்க அவரின் கணவர் ரமேஷ் தன்னுடைய 6 வயது மகளுடன் வந்தனர். என்னுடைய மனைவி பெரிய பிரச்னையில் சிக்கி தற்போது காவலர்கள் பிடியில் இருக்கிறார்.
அவரினை பாதுகாப்பாக மீட்டு தரும்படி தனது மனுவில் தெரிவித்து இருக்கிறார். மனுவை பெற்றுக்கொண்ட தமிழ்நாட்டு அமைச்சர் மஸ்தான் விரைவில் அவரை பத்திரமாக மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.