UAE Tamil Web

துபாய்: மனைவியின் பிறந்தநாளுக்கு 15 லட்சம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த இந்தியர்..!

ROLS ROYS

உலகின் மிகச் சிரமமான காரியங்களில் ஒன்று மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கிக்கொடுப்பது. வெள்ளி கிரகத்திற்கு ராக்கெட் விடுவதை விட இந்த வேலை விவகாரமானது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். அப்படியான சூழ்நிலையில் துபாயில் வசித்துவரும் இந்தியரான அம்ஜத் சித்தாரா தனது காதல் மனைவிக்கு 1.5 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 2021 ரோல்ஸ் ராய்ஸ் Wraith காரைப் பரிசாக வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

BCC நிறுவனத்தின் தலைவராக உள்ள அம்ஜத் – மார்ஜனா தம்பதிக்கு கடந்தாண்டு ஜூன் 4 ஆம் தேதி திருமனமாகியிருக்கிறது. கடந்த மாதம் இந்தத் தம்பதிக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.

தனது 22 வது பிறந்தநாளுக்கு இப்படியொரு பரிசை அம்ஜத் அளிப்பார் என எதிர்பார்க்கவில்லை என மார்ஜனா பூரிப்புடன் கூறுகிறார். மேலும், இதுபற்றிப் பேசுகையில்,” என்னை ஷோரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்கு மிகவும் பிடித்த 2021 ரோல்ஸ் ராய்ஸ் Wraith கார் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு எங்களுக்காகத் தயாராக இருந்தது. அந்நேரத்தில் எனக்குள் பெருக்கெடுத்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதென்றே எனக்குத் தெரியவில்லை” என்றார்.

மர்ஜானின் கடந்தாண்டு பிறந்தநாளுக்கு மெர்சீடிஸ் E க்ளாஸ் காரை அம்ஜத் பரிசாக அளித்திருக்கிறார். வீட்டில் மெர்சீடிஸ் G-Wagon, மெர்சீடிஸ் E க்ளாஸ், பெண்ட்லி, ரேஞ்ச் ரோவர், லெக்சஸ், லேண்ட் க்ரூசர், ஜீப் மற்றும் டாட்ஜ் ஆகிய கார்களை வைத்திருப்பதாக அம்ஜத் தெரிவித்தார்.

ROLS ROYS
7 Shares
Share via
Copy link