அமீரகத்தில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI-க்கள்) தங்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும், நிலையான வருமானத்திற்காகவும் இந்தியாவில் குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த “இந்தியா ரியல் எஸ்டேட் ஷோ 2022″ஐப் பார்வையிட்ட சொத்து வாங்குபவர்கள் ஊடகங்களிடம் பேசினார், அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்குத் திரும்பும் NRIகள் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்காக தங்கள் சொந்த நாட்டில் குடியேற இதுவே சிறந்த நேரம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் செந்தில் என்பவர், வணிகத் திட்டங்கள் அல்லது ப்ளாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக இந்த கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளார். இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை இந்த கட்டத்தில் சற்று மெதுவாக உள்ளது என்றும், ஆனால் இந்தியாவில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேகமாக விரிவடைந்து வருவதால் ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் அடையும் என்றும் அவர் கூறினார்.
சில வருடங்களில் இந்தியாவில் குடியேற விரும்பும் தற்போது அமீரகத்தில் இருக்கும் NRIக்கள் இப்போது இந்திய நாட்டில் ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளர்.
“வணிக ரீதியாக ரியல் எஸ்டேட் வைத்திருப்பது மிகவும் சிறந்தது, ஏனெனில் அது மாதாந்திர வாடகையை நமக்கு அளிக்கிறது. உங்களிடம் முதலீடாக ஒரு ப்ளாட் இருந்தால், நீங்கள் அதை விற்கும் வரை அல்லது அதில் ஏதாவது ஒன்றைக் கட்டி வாடகைக்கு விடும்வரை அது ஒரு Dead Investment ஆகும் என்றும் அவர் கூறினார்.
அமீரகத்தில் வசிக்கும் பல இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இப்பொது தங்கள் சொந்த நாட்டில் சொத்துக்களை வாங்க முனைப்பு காட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.