நவம்பர் மாதத்தின் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை OAG ஏவியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் துபாய் சர்வதேச விமான நிலையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் சீட்களின் அடிப்படையில் விமான நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
திறனை 15% துபாய் சர்வதேச விமான நிலையம் அதிகரித்துள்ளதால் மாதத்திற்கு 5 லட்சம் சீட்கள் அதிகரித்திருக்கின்றன.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
எக்ஸ்போ, ஷேக் சயீத் திருவிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் காரணமாக வெளிநாடுகளிலிருந்து துபாய் வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
. @OAG_Aviation: @DXB retains its position as the Busiest International Airport in the World this month… #Dubai has also seen capacity increase by 15% on last month, adding almost 0.5m seats this month. pic.twitter.com/s2C6cMcVe9
— Dubai Media Office (@DXBMediaOffice) December 28, 2021