UAE Tamil Web

கோவிஷீல்டு எடுத்துக்கொண்ட இந்தியர்கள் அமீரகம் வரலாமா? – துபாய் அரசு விளக்கம்..!

vaccination

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடையை அமீரக அரசு நீக்கியுள்ளது. ஜூன் 23 ஆம் தேதிமுதல் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் துபாய் வரலாம் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் மேலாண்மை ஆணையம் நேற்று அறிவித்தது.

பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பயணிகள் பெற்றிருக்கவேண்டும் என்ற விதிமுறையும் இடம்பெற்றுள்ளது.

அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • பைசர் பையோஎன்டெக்
  • ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா அல்லது கோவிஷீல்டு
  • சினோபார்ம்
  • ஸ்புட்னிக்

பயணிகள் ஆகிய தடுப்பூசிகளில் ஒன்றை பயணிகள் பெற்றிருக்கவேண்டும்.

இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த துபாய் சுகாதார ஆணையம் “ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்காவும் கோவிஷீல்டு தடுப்பூசியும் ஒன்றுதான்” எனத் தெரிவித்திருக்கிறது.

vaccination
0 Shares
Share via
Copy link