துபாய் சர்வதேச விமான நிலையம் DXB 2021 ஆம் ஆண்டில் 29.1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் உலகின் பரபரப்பான விமான நிலையமாகத் தொடர்ந்து நீடிக்கிறது துபாய்.
துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ், கொரோனா தொற்று நோய்கள் இருந்தபோதிலும், துபாய் விமானப் போக்குவரத்து துறை உலகளாவிய விமானப் பயணத்தை அதிகரித்துள்ளது. துபாய் ஏர்ஷோ 2021 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகின் முதல் பெரிய ஏர்ஷோ, டெர்மினல் 1-கான்கோர்ஸ் டி மற்றும் கான்கோர்ஸ் ஏ ஆகியவற்றை மீண்டும் திறப்பதன் மூலம் துபாய் விமான நிலையம் 100 சதவீத செயல்பாட்டுத் திறனுக்கு திரும்பியது.
துபாய் EXPO 2020 துபாய்க்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது.
தற்போது உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டோம்.” என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
2022 இல் 55.1 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கை:
“ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா போன்ற முக்கிய சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பயண விதிமுறைகளை மேலும் தளர்த்துவதன் மூலம், 2022-க்கான பார்வை மிகவும் நம்பிக்கை வாய்ந்ததாக உள்ளது.”
தற்போதைய கணிப்புகள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் DXB மூலம் 55.1 மில்லையன் பயணிகளை எட்டும் என்று கிரிஃபித்ஸ் தெரிவித்தார்.
DXB 2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டிற்கு 29,110,609 பயணிகள் வந்துள்ளனர். இது 2020-ஐ விட 12.7 சதவீத வளர்ச்சியாகும். ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் DXB 11,794,046 பயணிகள் வந்துள்ளனர். இது முந்தைய காலாண்டை விட 77 சதவீதம் அதிகமாகும்.
தொற்று நோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக DXB இன் காலாண்டு போக்குவரத்து 10 மில்லியனைத் தாண்டியது. டிசம்பர் மாதம் மட்டும் 4.5 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் மொத்தம் 4.2 மில்லியன் பயணிகள். அதில் 1.8 மில்லியனுடன் பாகிஸ்தான், 1.5 மில்லியன் சவுதி அரேபியா, அமெரிக்கா 1.1 மீல்லியன் , எகிப்து 1 மீல்லியன், துருக்கி 945,000 , 1.2 மில்லியன் UK பயணிகள் ஆகும்.
துபாய் விமான நிலையம் மூலம் வருகை புரிந்தவர்களில் அதிகப்படியானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆகும்.
2021 இல் DXB இன் சிறந்த நகரங்கள்: 916,000 பயணிகளுடன் இஸ்தான்புல், கெய்ரோ 905,000, லண்டன் 814,000 மற்றும் புது டெல்லி 791,000 பயணிகள்.
DXB தற்போது 84 சர்வதேச கேரியர்கள் மூலம் 93 நாடுகளில் 198 இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று நோய்க்கு முன் 2019-ஐ விட அதிகமாகும்.