UAE Tamil Web

உலக சாதனை படைத்த துபாய் ஜெட்மேன் ‘வின்ஸ் ரெஃபெட்’ மரணம்.. பாலைவனத்தில் பயிற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்.!

jetman

ஜெட் பேக்குகள் மற்றும் கார்பன் ஃபைபர் சிறகுகளைப் பயன்படுத்தி துபாய்க்கு மேலே அற்புதமான ஸ்டண்ட் செய்த “ஜெட்மேன் துபாய்” அணியின் ஒரு உறுப்பினரான பிரெஞ்சு வீரர் வின்ஸ் ரெஃபெட்(Vince Reffet) ஒரு பயிற்சியின் போது நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார்.

- Advertisment -

அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா உட்பட பல மிக உயர்ந்த கட்டிங்களில் இருந்து ஸ்கை டைவிங் செய்து பல சாதனைகளை படைத்துள்ளார் வின்ஸ்.

vince

வின்ஸ் இறப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ள ஜெட்மேன் துபாய் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா பின்ஹப்தூர், நவம்பர் 17, இன்று காலை துபாயில் பயிற்சியின் போது இறந்த ஜெட்மேன் பைலட், வின்சென்ட் (வின்ஸ்) ரெஃபெட் காலமானதை நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத சோகத்தோடு அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

36 வயதான வின்ஸ் ஒரு திறமையான விளையாட்டு வீரர், எங்கள் அணியினரால் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய உறுப்பினர். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும், அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருடனும் உள்ளன.

நகருக்கு வெளியே பாலைவனத்தில் உள்ள ரெஃபெட்டின் ஜெட்மேன் தளத்தில் நடந்த இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் பின்ஹப்தூர் கூறினார்.