UAE Tamil Web

அமீரகத்தில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – பல்வேறு பணிகளுக்கு வரும் சனிக்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது – விபரம் உள்ளே..!

job 2

துபாயில் உள்ள முக்கிய கூலிங் கம்பெனி ஒன்று பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப வரும் சனிக்கிழமை நேர்முகத்தேர்வு நடத்த இருக்கிறது. அந்நிறுவனத்தில் கீழ்க்கண்ட இடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் (control and instrumentation) டெக்னீசியன், பிளாண்ட் ஆப்பரேட்டர்/ அசிஸ்டன்ட் பிளாண்ட் ஆப்பரேட்டர், RO ஆப்பரேட்டர், HVAC டெக்னீசியன்/ அசிஸ்டன்ட் HVAC டெக்னீசியன், மெக்கானிக்கல் டெக்னீசியன்/ அசிஸ்டன்ட் மெக்கானிக்கல் டெக்னீசியன் மற்றும் எலெக்ட்ரிகல் டெக்னீசியன் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகிய இடங்களுக்கும் ஆட்கள் தேவைப்படுவதாகவும் விருப்பமுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு வரலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தகுதிகள்

கண்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் (control and instrumentation) டெக்னீசியன்: 

எலெக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். DDC பேனல்ஸ், PLC, இன்டர்ஃபேஸ் யூனிட்கள் மற்றும் இண்டக்ரேஷன் சிஸ்டம் (interface units and integration system) போன்றவற்றில் 4 ஆண்டுகள் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும்.

பிளாண்ட் ஆப்பரேட்டர்/ அசிஸ்டன்ட் பிளாண்ட் ஆப்பரேட்டர்:

ஏர் கண்டிஷனிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சில்லர் பிளாண்ட் முக்கியமாக டிஸ்ட்ரிக்ட் கூலிங் பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியவராக இருத்தல் அவசியம்.

RO ஆப்பரேட்டர்:

கெமிக்கல் எஞ்சினீரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பயன்பாட்டுத் துறையில் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis) பிரிவில் 2-3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கவேண்டும்.

ஆப்பரேட்டர், HVAC டெக்னீசியன்/ அசிஸ்டன்ட் HVAC டெக்னீசியன்:

ஏர் கண்டிஷனிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். கூல் ரெசிபி – கம்ப்ரசர்/ ஸ்கரீவ் சில்லர்ஸ் (cool recipe-compressor/screw chillers), பெரிய செண்ட்ரிஃபியூகல் சில்லர்ஸ் (large centrifugal chillers) போன்ற கருவிகளில் பராமரிப்பு மற்றும் ஓவர்ஹாலிங் பிரிவில் 2-3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

மெக்கானிக்கல் டெக்னீசியன்/ அசிஸ்டன்ட் மெக்கானிக்கல் டெக்னீசியன்:

மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவராக இருக்கவேண்டும். கம்ப்ரசர், பம்ப்கள், வால்வ்கள், FCU, AHU மற்றும் கூலிங் டவர்கள் ஆகியவற்றில் பராமரிப்பு மற்றும் ஓவர்ஹாலிங் பிரிவில் 2-3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

எலெக்ட்ரிகல் டெக்னீசியன்:

மெக்கானிக்கல்/எலெக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ்/ஏர் கண்டிஷனிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HVAC மீட்டர்கள் பராமரிப்பில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதனுடன் டிஸ்ட்ரிக்ட் எனெர்ஜி சிஸ்டம்களில் (district energy systems) குறைந்தது ஒருவருடம் பணியாற்றியிருக்கவேண்டும் அல்லது செண்ட்ரிஃபியூகல்/ஸ்கரீவ் சில்லர்ஸ் -களில் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்

ரமதா ஜுமேய்ரா ஹோட்டல்,

அல் மினா சாலை,

சத்வா.

சனிக்கிழமை (மே 29) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்

  • சமீபத்திய CV
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
  • பாஸ்போர்ட் நகல்/விசா நகல்.
  • எமிரேட்ஸ் ஐடி நகல்.
  • படிப்பு மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்கள்.

முக்கிய அறிவிப்பு

பங்கேற்க வரும் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அட்டைகளை வைத்திருத்தல் வேண்டும். அல்லது 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR பரிசோதனை முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

job 2
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap