UAE Tamil Web

திருடிய நகைகளுடன் போட்டாக்களுக்கு கூலாக போஸ் கொடுத்த பணிப்பெண் – சோலியை முடித்த பேஸ்புக்..!

fb

ஜுமேய்ராவில் உள்ள வில்லா ஒன்றில் வசித்துவந்த குடும்பத்திற்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. அவருடைய மற்றும் அவரது மகளின் நகைகள் ஒவ்வொன்றாக காணாமல்போவது தெரிந்திருந்தும் அவற்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வீட்டில் இருக்கும் 46 வயது பணிப்பெண்ணை எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தாகிவிட்டது. தன்னிடம் இல்லை என அவர் சத்தியமே செய்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு முதல் வேலைபார்த்துவந்த அவர் 2018 ஆம் ஆண்டு வேலையை விட்டுச் சென்றிருக்கிறார். கடைசிவரை காணாமல் போன நகைகள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.

இருப்பினும் சமீபத்தில் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த நகையைத் தொலைத்த பெண், அவரது பணிப்பெண்ணின் பேஸ்புக் முகவரியில் இருந்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்றினைப் பார்த்திருக்கிறார். அதில் அவர் அணிந்திருப்பது தன்னுடைய நகைதான் என்பதை சில வினாடிகளிலேயே தெரிந்துகொண்டார்.

இதனையடுத்து காவல்துறையிடம் புகார் கொடுக்க, பணிப்பெண்ணின் வீட்டை காவல்துறை சோதனையிட்டதில் வீட்டு உரிமையாளரின் காணாமல்போன அனைத்து நகைகளும் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆகவே, தற்போது அந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். 5 ஆண்டுகளாக காணாமல் போன நகைகளை பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்மணி தெரிவித்தார்.

fb
0 Shares
Share via
Copy link