UAE Tamil Web

இனி துபாய் மால் இல்லை… பெயரில் செய்யப்பட்ட “பெரிய” மாற்றம்… இனி இப்படித்தான் சொல்லணுமாம்… அடடே!

உலகின் புகழ்பெற்ற மாலாக கருதப்படும் துபாய் மால் தன்னுடைய பெயரினை மாற்றம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தினை சேர்ந்த மக்கள் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.

துபாயில் அமைந்துள்ள துபாய் மால். மொத்த நிலப்பரப்பில் ஈரான் மாலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மால் இதுதான். 2011 ஆம் ஆண்டில், இது பூமியிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட கட்டிடம் என்ற சாதனையை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் 54 மில்லியன் பார்வையாளர்களை இந்த மாலை விசிட் செய்தனர்.

துபாய் மாலில் இருக்கும், துபாய் அக்வாரியம் மற்றும் டிஸ்கவரி சென்டர் திறக்கப்பட்ட முதல் ஐந்து நாளில் 61,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதை பதிவுசெய்தது. துபாய் மாலினை காண 2009இல் மட்டும் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்தனர். மேலும் ஒவ்வொரு வாரமும் 750,000 பார்வையாளர்கள் விசிட் செய்தனர்.

VR Park Dubai மாலில் இருக்கும் ஒரு தீம் பார்க். சேகா தீம் உரிமம் காலாவதியான பிறகு, ஜூன் 1, 2017 அன்று தீம் பார்க் மூடப்பட்டது. பின்னர் இது பிப்ரவரி 2018 இல் VR Park Dubai என்ற பெயரில் VR reality தீம் பார்க்காக மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் இந்த மால் 50 சர்வதேச கால்பந்து அரங்கு இணைந்து இருப்பது போல பெரிய அளவில் அமைந்துள்ளது.

டிசம்பர் 2012இல், புர்ஜ் கலீஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் 820-மீட்டர் நீளமுள்ள (2,690 அடி) உயரமான, மெட்ரோ இணைப்பை நிறைவு செய்வதாக Emaar Properties அறிவித்தது. துபாய் மால் ஒரு மாத துபாய் ஷாப்பிங் திருவிழாவின் போது மார்ச் 2010 இல் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பதிவுசெய்தது, இது எல்லா நேர சாதனையையும் படைத்தது. 2017 ஆம் ஆண்டில், துபாய் மால் உலகின் மிகப்பெரிய OLED திரையை வெளியிட்டது.

இப்படி ஏகப்பட்ட சிறப்பினை வைத்திருக்கும் துபாய் மாலின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி The Dubai mall என்ற பெயரில் அழைக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பெயரில் உங்களுக்கு பிடித்த மால் என்ற கேப்ஷனுடன் இதை மால் நிர்வாகம் டிக்டாக்கில் வெளியிட்டு இருக்கிறது.

இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பெயரா முக்கியம். இது எப்போதுமே எங்கள் ஸ்பெஷல் மால் என்ற கமெண்ட்டினை தட்டி வருகின்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap