39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

கீழே கிடந்த 20000 திர்ஹம்ஸை ஒப்படைத்த ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்.!

ecco1_tcm87-20660_thb

பிறர் பணம் மீது ஆசை கொள்ளாமல், தான் பணிபுரியும் கடையில் கண்டறிந்த 20000 திர்ஹம்ஸ் பணம் நிறைந்த ஒரு உரையை (ENVELOPE), கடை மேலாளர்களிடம் ஒப்படைத்த ஒரு கடை ஊழியரின் நேர்மையை கவுரவித்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் ராணா மாகர் (25) என்பவர் துபாய் மாலில் ஷூ கடையை சுத்தம் செய்யும் போது அந்த உரையை கண்டுபிடித்தார். சற்றுமுன்பு அவர் பணிபுரியும் கடையிலிருந்து வெளியேறிய ஒரு பெண் வாடிக்கையாளரால் அதை விட்டுவிட்டதை உணர்ந்த அவர், உறைகளை தனது மேலாளரிடம் கொடுத்தார். இந்த சம்பவத்தை குறித்து துபாய் காவல்துறையிடம் கடை முதலாளிகள் எச்சரித்தனர். இப்போது அந்த பெண்ணை அடையாளம் காண துபாய் காவல்துறை முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த ஊழியரின் நேர்மையை பாராட்டி துபாய் காவல்துறை அவரை கவுரவிக்கும் வண்ணம் ஒரு பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் பண கவுண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது உறை ஒன்றைக் கண்டுபிடித்தேன். அதை குப்பை என நினைத்து வீச முயன்றேன். பின்னர் சந்தேகத்தின் பெயரில் அதனை திறந்து பார்த்த போது அதில் 20000 திர்ஹம்ஸ் இருந்தது தெரியவந்தது. என் குடும்பம் எப்போதும் நேர்மையாக இருக்க எனக்குக் கற்றுக் கொடுத்ததால் நான் அந்த உரையை ஒரு டிராயரில் வைத்து விட்டு என் மேலாளரை அழைத்தேன். என் மேலாளர் அந்த பண உரையை மாலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கச் சொன்னார்.”

மேலும் அவர் ” இந்த சான்றிதழை துபாய் காவல்துறையிடமிருந்து பெறுவதை நினைத்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அது எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தரும்” என்றார்.

இந்த சம்பவம் பிப்ரவரி 2 ஆம் தேதி டேனிஷ் ஷூ நிறுவனமான ECCO (Danish shoe company ECCO) இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!