UAE Tamil Web

துபாய்: மெட்ரோ ரயிலுக்குள் டான்ஸ் ஆடிய நபர் : “கச்சேரி” வைத்த காவல்துறை..!

dancer

துபாய் மெட்ரோ ரயிலில் ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது. அன்னார் தன்னுடைய கலைச் சேவையின்போது மாஸ்க்கும் அணியவில்லை. வைரலான வீடியோவைக் கண்காணித்த துபாய் காவல்துறை அதிகாரிகள் அந்த டான்ஸ் ஆசாமியைக் கைது செய்திருக்கிறார்கள்.

பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது மற்றும் கொரோனா விதிமுறையான மாஸ்க் அணியவேண்டும் என்ற விதிமுறையை மீறியது ஆகிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் பிரிகேடியர் ஒபைத் அல் ஹத்பூர் இதுகுறித்துப் பேசுகையில்,” பிற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் அவர் நடந்துகொண்டிருக்கிறார். பொது நீதி மற்றும் பிறருக்கு இடையூறு அளிப்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும்/ அல்லது 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்தார்.

dancer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap