UAE Tamil Web

சாலையில் சென்றவர்களை அலறவிட்ட டிரைவர் – அலேக்காக தூக்கிய துபாய் காவல்துறை..!

Culprit

துபாய் காவல்துறையால் வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், சாலை உபயோகிப்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டிச்சென்ற 21 வயது இளைஞரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஷார்ஜா காவல்துறையுடன் இணைந்து இவரைப் பிடித்ததாக துபாய் காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பே குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமீரக பெடரல் சட்ட எண் 3 (1987) மற்றும் 21 (1995) ன் அடிப்படையில் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கட்ட நடவடிக்கைகளுக்காக இளைஞர் மீதான வழக்கு பொது வழக்குத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நல்வாழ்விற்கு குந்தகம் விளைவிப்பவரையும், காவல்துறையின் விதிமுறைகளை மீறுவோரையும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என துபாய் காவல்துறை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.