UAE Tamil Web

மாஸ்க் போடாதவரை நிறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு சரமாரி அடி உதை..!

Mask

துபாயின் JBR சாலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, மாஸ்க் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஐரோப்பாவைச் சேர்ந்த ஆசாமி ஒருவரை காவல்துறை தடுத்து நிறுத்தி, மாஸ்க் எங்கே எனக் கேள்வி கேட்க, அவர் காவல்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதனையடுத்து அவரை கை விலங்கிட்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றார்கள். இந்நிலையில் இன்று துபாய் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காவல்துறை அதிகாரி ஒருவரை கீழே தள்ளி அவருடைய நெஞ்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டவர் ஏறி அமர்ந்ததாக சக காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனையும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தபடவேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் சட்டத்தை மதிப்பவன்; அதிகாரிகளை தான் தாக்கவில்லை எனத் தெரிவித்த குற்றம் சாட்டப்பட்டவர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்.

Mask
0 Shares
Share via
Copy link