UAE Tamil Web

விடுமுறை கிடைக்காததால் ஆத்திரம் : சக ஊழியரை கத்தியால் குத்திய நபர்..!

KNIFE WITH BLOOD

துபாயில் விடுமுறை கிடைக்காத கோபத்தில் தனது சக பணியாளரை கத்தியால் குத்திய நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதன்பிறகு அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

22 பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கிய நிறுவனம் இதனை ஊழியர் ஒருவர் மூலமாக தொழிலாளர்களிடம் தெரிவித்திருக்கிறது. அவரும் செய்தியை தொழிலாளர்களிடத்தில் சேர்த்திருக்கிறார். இதனிடையே தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனவும் ஆகவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் எனவும் ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அவரிடம் நிறுவனத்தின் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் பாதிக்கப்பட்டவர். மேலும் நிர்வாகத்தோடு பேசி உதவி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் தனக்கு விடுமுறை கொடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அந்நபர் கத்தியால் அவரை பலமுறை குத்தியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ஊழியரை மீட்புப்படை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது.

இதனையடுத்து குற்றவாளியை துபாய் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. நீதிமன்ற விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.