UAE Tamil Web

போலி பாஸ்போர்ட்டுடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கிய நபர் – கடுமையான அபராதம் விதித்த நீதிமன்றம்..!

dubai airport

25 வயதான அரபு இளைஞர் ஒருவர் ஐரோப்பிய போலி பாஸ்போர்ட்டுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய வழக்கு இன்று துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்ட்டுடன் ரோம் நாட்டிற்கு செல்வதற்காக குற்றவாளி டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். துபாய் விமான நிலையத்தில் உள்ள கியோஸ்க் சேவை மூலமாக போர்டிங் பாசையும் அவர் பெற்றிருக்கிறார்.

பயண தேதியன்று, போர்டிங் கேட்டில் பிடிபட்ட இந்த இளைஞர் வைத்திருந்த பயண ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட், என்ட்ரி மற்றும் எக்ஸிட் ஸ்டாம்ப் ஆகியவை போலியானது எனத் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 1,50,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.