UAE Tamil Web

துபாய்: எரிந்து சாம்பலான இரு கிடங்குகள் – வானத்தை மறைத்த கரும்புகை..!

fire accident

துபாயின் ராஸ் அல் கோர் பகுதியில் அமைந்திருந்த இரண்டு கிடங்குகளில் இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. துபாய் சிவில் பாதுகாப்பு மையத்திற்கு இதுகுறித்து இன்று மதியம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த நிமிடமே தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்துவந்த தீயனைப்ப்பு வீர்கள், தீயினைக் கட்டுப்படுத்தி பிற கட்டிடங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இவ்விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்தின் காரணமாக வெளிவந்த கரும்புகை அப்பிராந்தியத்தையே மறைத்தது. சாம்பலான முதல் கிடங்கில் சாயப் பொருட்களும் இரண்டாவது கிடங்கில் கட்டுமானப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

fire accident
3 Shares
Share via
Copy link