UAE Tamil Web

துபாய் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

விமான போக்குவரத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அமீரகத்திற்கு பயணிகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர். இதனால் துபாய் விமான நிலையம் வழக்கத்தை விட அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் பயணிகள் வசதி கருதி துபாய் விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை இன்றும் (20-08-2021) அடுத்த வெள்ளிக்கிழமையும் (27-08-2021) மட்டும் அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணி வரை மட்டுமே இயங்கிய மெட்ரோ ரயில்கள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க உள்ளன. காலை 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை துபாய் மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணிக்கலாம் என சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link