UAE Tamil Web

பிரமிக்க வைக்கும் வசதிகளை கொண்ட துபாய் மெட்ரோவுக்கு வயசு 12 – HBD Dubai Metro!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளை பத்திரமாக தாங்கிச் செல்லும் துபாய் மெட்ரோவுக்கு இன்று 12வது பிறந்தநாள். 2009ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி துபாய் மெட்ரோவின் முதல் ரயில் பயணத்தை அமீரக பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Mohammed to inaugurate Dubai Metro Green Line on 9/9/2011 - News - Emirates  - Emirates24|7

இன்று வரை துபாய் மெட்ரோவில் 129 ரயில்கள் இயங்கி வருகின்றன. தொடங்கப்பட்ட நாள் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் துபாய் மெட்ரோ 1.7 பில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. மேலும் 3 மில்லியனுக்கும் அதிகமாக துபாய் மெட்ரோ மூலம் ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துபாய் மெட்ரோவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையமாக ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட் திகழ்கிறது. நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பயணிகளை கையாளக்கூடிய வகையில் மிக பிரமாண்டமாக ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை 6% ஆக இருந்த நிலையில் தற்போது துபாய் மெட்ரோவின் சிறப்பான சேவையால் 18.1% ஆக உயர்ந்துள்ளது.  ஆண்டுக்கு 210 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக துபாய் மெட்ரோ செயல்பட்டு வருகிறது.

Covid: Reach Dubai Metro station 30 mins before departure - News | Khaleej  Times

உலகின் பாதுகாப்பான நகரங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள துபாய், மெட்ரோ போக்குவரத்திற்கென பிரத்யேக காவல்துறையையும் உருவாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது. மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி 3000 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி உஷார் நிலையிலேயே உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வழிகளையும் இருக்கைகளையும் அமைத்த பெருமையும் துபாய் மெட்ரோவையே சாரும். எண்ணற்ற பயணிகளை பத்திரமாக வீடு கொண்டு சேர்க்கும் துபாய் மெட்ரோ பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே துபாய் மக்களின் வாழ்த்தாக இருக்க முடியும்!

2 Shares
Share via
Copy link