துபாயில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் பல கார்கள் ஒன்றோடொன்று மோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது.
ஷேக் சயீத் சாலையில் இருந்து ஜுமைரா செல்லும் உம் சக்கேம் சாலையில் இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததாகவும் வாகனவோட்டிகள் வேறு பாதையினைத் தேர்ந்தெடுக்கும்படியும் துபாய் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
#TrafficUpdate | 07:58
A multi-vehicle collision on Umm Suqeim rd coming from SZR towards Jumeriah rd, resulting in traffic congestion. Kindly be extra cautious. pic.twitter.com/DmAS81u0Ki
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) September 9, 2021
விபத்து நேர்ந்த இடத்தை வேடிக்கை பார்த்தால் 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இப்படி கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்களால் ஆம்புலன்ஸ், காவல்துறை, மீட்புக்குழு ஆகியோரின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படும் என்பதால் இதனை அமீரக அரசு குற்றமாகக் கருதுகிறது.
அதேபோல, விபத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி சாலை விபத்தினை/ தீ விபத்தினை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு 1,50,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.