UAE Tamil Web

24×7 மணிநேரமும் இயங்கும் ரெசிடென்சி விசா சேவை – GDRFA அறிமுகம்..!

residency visa

அமீரக குடியிருப்பளர்கள் தங்களது ரெசிடென்ஸ் விசா குறித்த சேவைகளை 24×7 மணிநேரமும் பெறக்கூடிய வகையில் புதிய குழு ஒன்றினை அமைத்துள்ளதாக குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குனரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

ஜூலை 7 ஆம் தேதிமுதல் இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ ஆர் ஸ்பெஷல் (You are Special) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலமாக கம்பெனிகள், தனி நபர்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஆகியோர் தங்களது ரெசிடென்சி விசா குறித்த தகவல்கள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

இதுகுறித்துப் பேசிய GDRFA வின் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி,” வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தீர்ப்பதையே நோக்கமாகக்கொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதுவே துபாயை மற்ற இடங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது” என்றார்.

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒருங்கிணைந்த பணியிடத்தை அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என மர்ரி குறிப்பிட்டார். வாடிக்கையாளர்கள் ரெசிடென்சி விசா குறித்த தகவல்களை பல இடங்களில் பெறுவதற்குப் பதிலாக தங்களது அனைத்து சந்தேகங்களையும் இந்தக் குழுவிடம் கேட்டு தெளிவுபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

residency visa
0 Shares
Share via
Copy link