துபாயில் வரும் வார இறுதியில் ஷாப்பிங் செய்பவர்கள், 90 சதவீதம் வரை பெரும் தள்ளுபடியைப் பெற மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனவரி 15ந் தேதி சனிக்கிழமை இந்த மெகா விற்பனை தொடங்க உள்ளது. இதில் உலகளாவிய பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம். துபாய் ஷாப்பிங் திருவிழாவின் ஒரு பகுதியாக DTCM உடன் இணைந்து மெகா விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காலை 10 மணி முதல் கடையில் அல்லது ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த அசத்தல் தள்ளுபடி கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளுமாறு டிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது”.
மேலும், வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காக, துபாயின் மால்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இடங்கள் அனைத்தும் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட கடுமையான கோவிட் -19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கின்றன. அதே நேரத்தில் பார்வையாளர்களையும் ,கடைக்காரர்களையும் பாதுகாப்பாகவும், எளிதாகவும் வைத்திருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.