உலகம் வெப்பமயமாகி வருவதால் அண்டார்டிகாவில் இருந்து பிரியும் பனிகட்டிகளை பயன்படுத்திக்கொள்வது தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் பனிப்பாறைத் திட்டம்.
தூய்மையான தண்ணீரில் அமைந்துள்ள இந்த பனிப்பாறைகள் நாளுக்கு நாள் உருகி வருகின்றன.
இந்நிலையில் இயற்கை அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிழவும் பகுதிகளுக்கு இந்த பணிப்பறைகளை கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளதகாவும் தேசிய ஆலோசகர் பணியகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை ஆலோசகரான அப்துல்லா அல்ஷேஹி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்துல்லா அல்ஷேஹி கூறியதாவது: பணிப்பாறைகளை கடல் வழியிலேயே கொண்டு வந்து தண்ணீரைப் பெருவது இதன் நோக்கமாகும். ஆஸ்திரேலியவுக்கு உட்பட்ட ஹியர்த் தீவில் அதிகளவிலான பனிப்பாறைகள் நிறைந்துள்ளன. இந்த திட்டத்தின் முதல் பகுதியை ஹியர்த் தீவில் இருந்து துவங்க இருக்கிறோம். முதல் கட்டமாக சிறிய பனிப்பாறைகளை கொண்டுவருவதன் மூலம் திட்டத்தின் குறை மற்றும் செயல்பாடுகளை கண்டறிய உள்ளோம்.
மேலும் கப்பல்களின் மேல் பனிப்பாறைகளை ஏற்றாமல் கடலில் மிதக்க வைத்து கொண்டுவர உள்ளோம். கடலில் மிதக்க வைத்து கொண்டு வந்தால் பனிப்பாறைகள் 30 சதவீதம் உருகிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகள் 300 முதல் 500 கியூப்பிக் கேலன்கள் தண்ணீரைக் கொண்டுள்ளதால் உருகும் பனிப்பாறைகளை தவிர்த்து மீதமுள்ளதை கொண்டுவருவது பெரிய வெற்றியாகும்.
இந்த பனிப்பாறைகள் அண்டார்டிகாவில் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து தூரத்தில் இருக்கின்றன. சர்வதேச கடற்கரை சட்டவிதகளின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் நீர் ஆதாயத்திற்காக பனிப்பாறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாயத்திற்காக மட்டுமின்றி உலகின் நல்வாழ்வுக்கு இது பயனளிக்கும். இதனால் உலக வெப்பமயமாவதால் சிக்கல்கள் இருக்காது என நம்புகிறோம். இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரின் மூலம் பாலைவனத்தை பசுமையாக மாற்றமுடியும்.
இவ்வாறு அல்ஷேஹி கூறினார்.