துபாய் போலீஸ் படையில் புதிதாக அதிக திறன் கொண்ட Maserati Granturismo கார் சேர்ப்பு.!

Maserati Granturismo Car
Image Credit: www.thenational.ae

துபாய் போலீஸ் கூடுதலாக புதிய Maserati Granturismo வகை காரை தங்களுடைய வாகன படையில் சேர்த்துள்ளது.

உலகில் மிகச்சிறந்த நவீன திறன் கொண்ட ரோந்து வாகங்களை வைத்திருக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக Maserati Granturismo வகை நவீன தொழிற்நுட்ப காரை தங்கள் வாகன படையுடன் சேர்த்துள்ளது. இதன் வேகமானது மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. அதனுடன் 4.7 லிட்டர் V8 வகை என்ஜின் கொண்டது.

இதற்கு முன்னர் 267 Mph திறன் கொண்ட Bugatti Veyron கார்கள் துபாய் போலீஸாரால் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக Maserati GrandTurismo கார்கள் பயன்படுத்துவது உலக நாடுகளை ஆச்சரியத்திலும், பொறாமையிலும் ஆழ்த்தியுள்ளது.

Loading...