குழந்தைகளுடன் கடற்கரைக்கு குளிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் அறிவுரை!

Dubai Police advice to beach goers

குழந்தைகளுடன் கடற்கரைக்கு தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் சிறிய அறிவுரை கூறியுள்ளது.

விடுமுறை நாட்களில் அதிகமானோர் தங்களுடைய குழந்தைகளுடன் கடற்கரை செல்வது உண்டு. இதனை கருத்தில் கொண்டு துபாய் போலீஸ் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.

தங்களுடைய குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து செல்வோர் அவர்களை பத்திரமாக தொடர்ந்து கண்காணித்து கொள்ளும்படி துபாய் போலீஸ் கூறியுள்ளது. மேலும், அவர்களை தனியாக கடலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், லைஃப் ஜாக்கெட் இல்லாமல் ஒருபோதும் அவர்களை கடலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம், என்றும் தங்களுடைய அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளது.

கடல் சார்ந்த மரணங்கள் அதிகம் ஏற்படுவதற்கு, அரசு அதிகாரிகளின் அறிவுரையை ஏற்க மறுப்பதும், மேலும் போதிய முன் பாதுகாப்பு இல்லாமல் கடலில் குளிக்கச் செல்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

ஆகையால் இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்புகளுடன் தாங்களும், தங்களுடைய குழந்தைகளும் கடற்கரைக்கு குளிக்கச் செல்லும் படி துபாய் போலீஸ் அறிவுரை கூறியுள்ளது.

Loading...