UAE Tamil Web

நடுவானில் மோசமான உடல்நிலை – ஹெலிகாப்டரோடு காத்திருந்த துபாய் காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்..!

police-rescue-

சிகிச்சைக்காக துபாயிலிருந்து ஐரோப்பிய நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை மோசமானதால், ஹெலிகாப்டர் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது துபாய் காவல்துறை.

சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த ஐரோப்பியாவைச் சேர்ந்த பெண்மணிக்கு அவருடைய சொந்த ஊரில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பம் முடிவு செய்திருக்கிறது. ஆனால் பயணத்தின்போது பெண்மணியின் உடல்நிலை மோசமானதால், துபாய் காவல்துறையின் விமானப்படைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

சற்று நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க, உடனடியாக பெண்மணியை ஹெலிகாப்டர் மூலமாக ரஷீத் மருத்துவமனைக்கு காவல்துறை அழைத்துச் சென்றிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய விமான கட்டுப்பாட்டு அதிகாரியும் துபாய் காவல்துறையின் விமானப்படை தலைமை இயக்குனருமான கர்னல் அலி முகமது ஃபராஜ் அல் முஹைரி,” பெண்மணியின் உடல்நிலை மோசமடைந்ததும் பயணம் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் திருப்பப்பட்டது. அங்கே ஹெலிகாப்டருடன் துபாய் காவல்துறையின் விமானப்படை அதிகாரிகள் காத்திருந்தனர்” என்றார்.

சாலை கண்காணிப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மனிதாபிமான சேவைகளில் துபாய் விமானப்படை தொடர்ந்து இயங்கிவருவதை ஃபராஜ் நினைவுகூர்ந்தார்.

police-rescue-
0 Shares
Share via
Copy link