தனது வயிற்றுக்குள் வைத்து கொக்கைன் கடத்தியதற்காக 43 வயது நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை கண்காணித்தனர்.
அதனையடுத்து சோதனைச் சாவடியில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார், போதை பொருட்களை அவர் கட்டத்தி செல்கின்றாரா என்று போலீசார் விசாரித்தபோது அவர் மறுத்துள்ளார். இருப்பினும் ஸ்கேனர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரை சோதித்தபோது அவர் வயிற்றில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அந்த நபர் சுமார் $1,000 மதிப்பிலான கோகோயின் காப்ஸ்யூல்களை தனது வயிற்றில் மறைத்து எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.
சுங்க அதிகாரி அவரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான பொதுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தார். காப்ஸ்யூல்கள் ஒரு மருத்துவமனையில் பிரித்தெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிசெய்தனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றவாளி தனது வாக்குமூலத்தை பொது வழக்கறிஞரிடம் மீண்டும் அளித்தார், அங்கு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
திரைப்பட பாணியில் வயிற்றுக்குள் வைத்து போதை பொருளை கடத்திய சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.