UAE Tamil Web

துபாயில் பிச்சையெடுத்த 12 பேர் கைது – துபாய் காவல்துறை அதிரடி..!

Beggers

ரமலானின் முதல் நாளன்று பிச்சையெடுத்த 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் ஊடுருவல் தடுப்புப் பிரிவு இயக்குனர் கர்னல் அலி சலீம்,” சமூக பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பிச்சை எடுப்பவர்களைக் கட்டுப்படுத்தும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அதிகளவில் பிச்சை எடுப்பவர்கள் இருக்கும் இடங்களில் ரோந்து செல்லவும் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

சமூக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் யாரும் யாசகர்களுக்கு பொருளளிக்க வேண்டாம் எனவும் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே ஈகை நடைபெறவேண்டும் எனவும் சலீம் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் பிச்சைக்காரர்கள் பற்றி புகாரளிக்க 901 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் அல்லது துபாய் காவல்துறையின் அப்ளிகேஷனின் Police Eye சேவை மூலமாக இதனை மேற்கொள்ளலாம்.

கடந்த 3 ஆண்டுகளில் துபாய் காவல்துறை 842 பிச்சைக்காரர்களைக் கைது செய்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கண்காணிக்க காவல்துறை துடிப்புடன் செயல்பட்டுவருகிறது எனத் தெரிவித்தார்.

Beggers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap