அமீரகத்தில் வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விற்பனை; 5 பேர் கைது..!

Dubai Police arrest gang selling drugs in UAE through social media (Photo: Khaleej Times)

சமூக ஊடகங்கள் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலை துபாய் போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை ஊக்குவித்ததற்காகவும், கூட்டாக குற்றங்களைச் செய்ததற்காகவும் 5 அரபு நாட்டவர்கள் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாய் காவல்துறையின் குற்றவியல் விசாரணை விவகாரங்களுக்கான உதவி தளபதி மேஜ்-ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி இது பற்றி கூறுகையில், “இந்த கும்பல் சமூக ஊடகங்களை, குறிப்பாக இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விற்க வாட்ஸ்அப்’பை பயன்படுத்தியுள்ளது” என்றார்.

கைது செய்யப்பட்ட இவர்கள் போதைப்பொருட்களை விற்று, மற்றொரு நாட்டில் வசிக்கும் தங்கள் தலைவருக்கு பணத்தை அனுப்பியுள்ளனர்.

இந்த கும்பலுக்கு பணத்தை மாற்ற உதவிய வங்கியாளரை முதலில் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், மற்ற நான்கு கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்ய ‘ஆபரேஷன் 12’ மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...