துபாய் காவல்துறை சமீபத்தில் 15 மருத்துவமனைகள் மற்றும் ஆறு ஹோட்டல்களுக்கு நினைவு கேடயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்த கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதில் துபாய் காவல்துறையுடன் ஒத்துழைத்ததற்காக அவர்களுக்கு இந்த நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிர்வாக விவகாரங்களுக்கான உதவித் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமது முகமது ரஃபி, விழாவில் பேசும்போது : “தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வகிப்பதிலும் துபாய் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.
“மேலும் பல பங்காளர்கள் துபாய் காவல்துறையுடனான அவர்களின் ஒத்துழைப்பில் சிறந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர், இது பெருத்தொற்று நெருக்கடிகளைக் கையாள்வதில் காவல்துரைக்கு பெரிதும் உதவியது” என்று அவர் மேலும் கூறினார்.
துபாய் போலீஸ் அதிகாரிகளின் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு விழாவில் ஆலோசகர் மேஜர் ஜெனரல் டாக்டர் அலி சிங்கேலும் கலந்து கொண்டார். கர்னல் டாக்டர் பத்ர் சுல்தான் பின் கபா, துபாய் போலீஸ் சுகாதார மையத்தின் தலைவர்; மற்றும் சுகாதார மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
முன்கள பணியாளர்கள் பலரின் தியாகமே இன்று அமீரகத்தை ஐந்தே பெருத்தெற்றில் இருந்து காப்பாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 21ம் தேதி கணக்குப்படி அமீரகத்தில் மொத்த பெருத்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 9,04,466 ஆக உள்ளது, மொத்த 8,88,228 இந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர். பலி எண்ணிக்கை 2,302 ஆக உயர்ந்துள்ளது.