UAE Tamil Web

இதுக்கா இவ்வளவு பில்டப்…! துபாயில் சுற்றித் திரியும் மர்ம விலங்கு இதுதான் – துபாய் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

Black_

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துபாயின் ஸ்ப்ரிங் 3 பகுதியில் வன விலங்கு ஒன்று சுற்றித் திரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

சுற்றித் திரியும் விலங்கு கருஞ்சிறுத்தை அல்லது சிறுத்தையாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் அது புலியல்ல பூனைதான் எனத் தெரியவந்திருக்கிறது. ஆமாம், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நிபுணர்களை கலந்தாலோசித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை அது கருப்புநிற வளர்ப்புப் பூனை எனத் தெரியவந்திருப்பதாக அறிவித்துள்ளது.

வீடியோவால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சரியான தகவல் கிடைக்கும் வரையில் காவல்துறை மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி,”தகவலின் உண்மைத்தன்மை தெரியாமல் அதனைப் பரப்புவது இதுபோல சிரமத்தை உண்டாக்கும். ஆகவே பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.