UAE Tamil Web

தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட துபாய் காவல்துறை..!

dubai police

இன்று உலக ஆரோக்கிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் துபாய் காவல்துறை இன்று நடத்தியது.

சிட்டி செண்டர் மிர்திஃப் -ல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹெமாயா பள்ளியைச் சேர்ந்த 20 ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துபாய் காவல்துறை வெளியிட்ட செய்தியில்,”உலக ஆரோக்கிய தினமான இன்று, நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரோக்கியம் குறித்த வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு சிட்டி செண்டர் மிர்திஃப் -ல் நடைபெற்றன. இதில் ஹெமாயா பள்ளியைச் சேர்ந்த 20 ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

dubai police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap