UAE Tamil Web

கொளுத்திய வெயில் ; தொழிலாளர்களுக்கு குடை மற்றும் மதிய உணவுகளை வழங்கிய துபாய் காவல்துறை..!

DUBAI POLICE

துபாயில் கோடைக்காலம் என்பதால் வெயில் பலரையும் வாட்டி வருகிறது. இந்த மோசமான வெயிலால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள் தான். ஆகவே, அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் துபாய் காவல்துறை மற்றும் ஸ்ப்ரிட் ஆப் தி யூனியன் அமைப்பின் தன்னார்வலர்கள் புதிய முயற்சி ஒன்றினை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இதனடிப்படையில் துபாயில் மதிய வேளையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு 100 குடைகள் மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய ஹட்டா காவல்துறையின் இயக்குனர் கர்னல் முபாரக் அல் கெட்பி,” இத்தகைய முயற்சிகள் சமுதாய உறுப்பினர்களிடையே தன்னார்வத் தொண்டு, ஒற்றுமை மற்றும் ஈகையின் மதிப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் மனித உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் எங்களது முதன்மையான குறிக்கோளாகும்” என்றார்.

கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அல் கெட்பி குறிப்பிட்டார்.

DUBAI POLICE
1 Share
Share via
Copy link